The News Sponsor By
feature-top
feature-top

முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்று வரும் பகுதியில் எலும்பு கூடுகள்.

கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்ற வரும் பகுதியில் எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் குறித்த பகுதியில் எலும்புகூடுகள் காணப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் நிறுவன பணியாளர்களால் வழங்கப்பட்டுள்ளது. 

அது தொடர்பில் பளை பொலிசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதவான் பார்வையிட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொள்ள உள்ளனர்.

குறித்த பகுதி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன், இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட கால யுத்தம் இடம்பெற்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

feature-top
feature-top