The News Sponsor By
feature-top
feature-top

நாளை இரவு முதல் செவ்வாய்கிழமை வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு.

நாடளாவிய ரீதியில் நாளை(சனிக்கிழமை) இரவு முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

எதிர்வரும் திங்கட்கிழமை ரம்ழான் தினமாக இருப்பதால் அன்றைய தினம் அரசாங்க, வங்கி விடுமுறையாகும். அதனால், குறிப்பிட்ட இரண்டு தினங்களும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த வார இறுதியில் ஊரடங்கை எவ்வாறு நடைமுப்படுத்துவது என்பது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

feature-top
feature-top