The News Sponsor By
feature-top
feature-top

ரஷ்யாவில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டுள்ளோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்குகிறது!


ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 8,894பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 150பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.


இதன்மூலம் தொடர்ச்சியாக ஏழாவது நாளாக 10 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.


உலகளவில் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள இரண்டாவது நாடான ரஷ்யாவில், வைரஸ் தொற்றுக்கு இதுவரை மொத்தமாக 3,249பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல வைரஸ் தொற்றால் பாதிப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 326,448ஆக உள்ளது.


மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 223,374 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2,300பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 99,825பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

feature-top
feature-top