The News Sponsor By
feature-top
feature-top

தமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பு, கணிசமாக குறைந்து, ஒரே நாளில் 2 ஆயிரத்து 173 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக ஆயிரத்து 688 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேநேரம், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 18 பேர் உயிரிழந்தனர். சென்னையில், புதிதாக 489 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் 147 பேர், செங்கல்பட்டில் 125 பேர், கொரோனாவால் பாதிக்கப் பட்டனர்.

அரியலூர், பெரம்பலூர், தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

feature-top
feature-top