The News Sponsor By
feature-top
feature-top

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில், அடித்துச் செல்லப்பட்ட 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மம்சாபுரம் அத்திதுண்டு பேமலையான் கோவில் அருகே, வியாழக்கிழமையன்று குளிக்கச் சென்ற கோட்டைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபி, பால்பாண்டி, முத்துக்கருப்பன் ஆகிய மூவரும் ஓடையில் தவறி விழுந்த நிலையில், வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இவர்கள் மூவருடன், மற்றொரு நண்பர் ஒருவரும் என, 4 பேர், பேமலையான கோவில் நீர்வீழ்ச்சிக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

 அப்போது, நீர்வரத்து திடீரென அதிகரித்ததால், பாறையில் நின்றிருந்த மூன்று பேர் ஓடையில் தவறி விழுந்து வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதில், தடுப்பணையில் சிக்கி 2 பேர் உயிரிழந்துவிட, ஒருவர் மட்டும், தடுப்பணை ஓட்டை வழியே வெளியே வந்த நிலையில், பலியானார். இதுகுறித்து, மம்சாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

feature-top
feature-top