The News Sponsor By
feature-top
feature-top

கனடா ஒன்ராரியோ மாநிலத்தில் ஸ்காபுரோவிற்கு அடுத்து தமிழர்கள் அதிகம் வதியும் நகர் மாக்கம் ஆகும். யோர்க் பிராந்தியத்திற்கு உட்பட்ட இந்நகரில் இரண்டு பகுதிகள் யோர்க் பிராந்தியத்தில் அதிக கோவிட் தொற்றுடைய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பிராந்தியத்தில் உள்ள கிங் சிற்றியே அதிக தொற்றுடைய பகுதியாக அடையாளம் காணப்பட்டிருக்க, மேலும் 4 பகுதிகள் வோன் நகரில் அடையாளம் காணப்பட்டள்ளன.

மாக்கம் நகரில் அடையாளம் காணப்பட்டுள்ள இரு பகுதிகளே தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகள் மட்டுமல்ல, தமிழர்கள் கனடாவில் அதிகம் வாழும் இரண்டாவது பகுதிகளாகும். இப்பகுதிகளில் தமிழ் மக்கள் தங்கள் சொந்த வீடுகளிலேயே அதிகம் வாழுகின்றனர். அதிகரித்த குடு;ம்ப எண்ணிக்கையிலானோர் ஒன்றாக வாழும் இப்பகுதிகளில், தமிழர்கள் மட்டுமல்ல சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தோரே, அதுவும் தென் ஆசியர்களே அதிகம் வாழுகின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

விசாலமான வீடுகளைக் கொண்ட இப்பகுதிகளில், மக்கள் அடிக்கடி ஒன்றுகூடல்களை நடாத்துவதும், ஒன்றுக்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் சந்தித்துக் கொள்வதுவும், நெருங்கிய குடும்பங்கள் அருகருகில் வாழுவதும், அதிகமாகவும் வேறு உள்ளது. குடும்ப ஒன்றுகூடல்கள் கோவிட் தொற்றிக்கு வேறு வழியேற்படுத்தி விடுகின்றன.

ஆகவே வேகமாக அதிகரித்துச் செல்லும் கோவி;ட் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்தவும், தமிழர்கள் பெருமளவில் தொற்றிக்கு உள்ளாவதை தடுக்கவும், வரும் நாட்களில் தமிழர்கள் தங்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் தவிர, ஏனைய எவரையும் சந்திப்பதை தவிர்த்துக் கொள்வது இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது. தொற்றுப் பகுதிகளும் அவற்றின் விபரமும் வருமாறு. பகுதிகளின் எல்லைகளை கீழுள்ள படத்தில் காணவும்.

அடைப்புக்குறிக்குள் உள்ள சதவீதம் பொசிட்டிவிட்டியைக் குறிக்கும். அதாவது இப்பகுதிகளில் இருந்து கோவிட் சோதனைக்கு தம்மை உட்படுத்தியவர்களில் 100 பேரில் எத்தனை பேர் கோவிட் தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்பதை அது குறிக்கும்.

L3S  (11.0%) -  யோர்க் பிராந்தியத்தில் அதிக கோவிட் தொற்றுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட 7 பகுதிகளில் 4ஆம் இடம் - ஒன்ராரியோவில் அதிக தொற்றுடைய 50 பகுதிகளில் 26ஆம் இடம். மார்க்கம் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகம் தொற்றுடைய பகுதி. இப்பகுதியே தமிழர்கள் மார்க்கத்தில் முதல் குடியேறிய பகுதி வேறு. இப்பகுதியின் ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினரும் கல்விச்சபை உறுப்பினரும் தமிழர்களே. 

L6B  (10.0%) - யோர்க் பிராந்தியத்தில் அதிக கோவிட் தொற்றுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட 7 பகுதிகளில் 5ஆம் இடம் - ஒன்ராரியோவில் அதிக தொற்றுடைய 50 பகுதிகளில் 31ஆம் இடம். இப்பகுதியிலும் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வாழுகின்றனர்;. புதிய குடியிருப்புக்களை தொடர்ந்தும் கண்டுவரும் இப்பகுதியே மாக்கத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் அதிகரித்த தமிழர்களைக் கொண்ட பகுதி என்றால் அது மிகையில்லை.

feature-top
feature-top