The News Sponsor By
feature-top
feature-top

நாட்டின் நேற்றைய நிலைவரத்தின் படி 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில்  487 கொரோனா தொற்றாளர்கள் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புகளை பேணியவர்கள் , வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த நான்கு பேருக்கும் நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த 03 பேருக்கும் , துருக்கியில் இருந்து வருகை தந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு மினுவாங்கொட கொரோனா கொத்தணி மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16,252 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 19,771 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 83 ஆக உயர்வடைந்துள்ளது.

எனினும் கொரோனா தொற்றுக்குள்ளாகி நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 13,590 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

feature-top
feature-top