The News Sponsor By
feature-top
feature-top

வடக்கு, கிழக்கில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாக பா.ஜ.கவின் அகில இந்திய மாநிலத் தலைவி வானதி சீனிவாசனிடம் இலங்கை தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்தள்ளது.

பாரதீய ஜனதாக் கட்சியின் அகில இந்திய மகளீர் அணித்தலைவியாக நியமிக்கப்பட்டமைக்கு இலங்கை தமிழரசுக்கட்சி தனது வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி கோரிக்கை விடுத்துள்ளது. 

தமிழரசுக்கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தங்களது நியமானது உலகெங்கும் அடக்கி ஒடுக்கப்படும் பெண்களினது சமூக பொருளாதார விடுதலைக்கு உந்து சக்தியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காக முன்னெடுத்த நீண்டகால விடுதலைப் போராட்டத்திலே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தரப்பாக பெண்களே உள்ளனர். 

எமது மக்களிற்கான குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்விற்கு தங்களது ஆக்கபூர்வமான நடவடிக்கையை எதிர்பார்த்தவர்களாக உள்ளோம்.

அத்துடன் இலங்கை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை நோக்கிய பயணத்திற்கு தங்களின் அனுசரணை நிச்சயமாக இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகின்றேன் என்றுள்ளது.

இதேவேளைர தமிழரசுக்கட்சியின் வாழ்த்துக்கு நன்றிகளை தெரிவித்துள்ள வானதி சீனிவாசன் 'தங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்' என்று தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

feature-top
feature-top