The News Sponsor By
feature-top
feature-top

நாடு முழுவதும் நேற்று (21/11/2020) வரை மொத்தம் 13,17,33,134 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

அதேபோல், நாடு முழுவதும் நேற்று (21/11/2020) ஒரேநாளில் மட்டும் 10,75,326 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக, தமிழகத்தில் நேற்று (21/11/2020) வரை மொத்தம் 1,14,70,429 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று (21/11/2020) மட்டும் தமிழகத்தில் 69,190 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் நாள்தோறும் கரோனா பரிசோதனைகளை தங்களது மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

feature-top
feature-top