The News Sponsor By
feature-top
feature-top

மூன்றாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை(23) மீள ஆரம்பமாகவுள்ளன. மேல் மாகாணத்தை தவிர ஏனைய மாகாண பாடசாலைகளே கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திறக்கப்படவுள்ளன.

மேல் மாகாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுவதால், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீள் அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஏனைய மாகாணங்களில் கல்வி நடவடிக்கைகள் நாளை மீள ஆரம்பமாகவுள்ளதால், பாடசாலைகள் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் பாடசாலைகளில் சுகாதார வழிமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

feature-top
feature-top