The News Sponsor By
feature-top
feature-top

தேசிய உணவு பாதுகாப்பு  வாரத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலகப் பரிவின் தோப்பூர் பிரதேசத்தில் உள்ள சாப்பாட்டுக் கடைகள் மற்றும் பேக்கரி உரிமையாளர்களுக்குஉணவு தொடர்பாக தெளிவூட்டல் செயலமர்வு இன்று (07) இடம் பெற்றது.

இந் நிகழ்வு தோப்பூர் உப பிரதேச சபை கட்டிட தொகுதியின் தோப்பூர் கிளிவெட்டி போன்ற பகுதிக்கான பொது சுகாதார அதிகாரிகளான எம்.எம்.சஜாத், மற்றும் எம்.ஐ.எம்.நிகார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது மக்களுக்கு சாப்பாட்டுக் கடைகள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் அனைவருக்குமான உணவை எவ்வாறு பாதுகாத்து  பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என்பது  தொடர்பாக உத்தியோகத்தர்களினால் அறிவுரை வழங்கப்பட்டது.

feature-top
feature-top