

கனடாவில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட மாநிலமாக விளங்குகிறது ஒன்ராறியோ. மாகாண அரசு கடந்த வார இறுதியிலிருந்து குறிப்பிட்ட அளவில் முடக்க நிலையை அறிவித்துள்ளது. எனினும் அந்த நடவடிக்கைகள் மட்டும் போதுமானவையாக இல்லை என்றும், இன்னும் தீவிரமான முயற்சிகள் தேவை என்றும் அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர். அது குறித்து மேலும் கலந்துரையாடப்படும் என பிரதமர் ட்ரூடோ உறுதியளித்தார். இந்த நிலையில் ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா 3வது அலையை குறைக்க புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாகாணம் முழுவதும் மக்கள் வீட்டிலேயே இருக்கும் படியான உத்தரவுக்கு முதல்வர் Doug Ford அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா 3வது அலையை குறைக்க ஒன்ராறியோ அரசு முன்னெடுத்தள்ள நடவடிக்கை போதுமானதாக இல்லை என கடந்த வாரம் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. வியாழக்கிழமை முதல் வீட்டிலேயே இருக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ள கட்டுப்பாடு சுமார் 4 வாரம் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரவை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதே போல் மாகாணத்தில் அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை கடைகளும் மூடப்படும். மளிகை கடை மற்றும் மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்படுமாம். எனினும், பள்ளிகள் மூடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





கனடாவில் முதல் முறையாக இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி!
நுரையீரல் தொற்று நோயில் இப்போது மக்களால் பெரிதும் அறியப்படுவது, நம்மை த
- Thedipaar
- Business Directory
- Event
- Epaper
- Ebook
- Register
- Registration
- Priceplan
- About us
- Contact Us
- Anuthaapam
- Lifetime Notice
- Rememberance
- Maveeran
- Post Obituary
- Quick Links
- Thedipaar Tv
- Thedipaar Fm
- Event
- Arist
- Classified
- Post
- Sell
- Buy
- Advertisement
- Advertisement
- Bulk Sms
- Bulk Call
- Bulk Mail
- Registration