The News Sponsor By
feature-top
feature-top

ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். அவர், சீனாவின் தொழிலதிபர் ஜாக் மாவை பின்னுக்குத் தள்ளியுள்ளார். இவர் ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த பிராந்தியத்தின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும் ஆசியாவின் செல்வந்தராகவும் அம்பானி உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளார். 84.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை அவர் மீண்டும் பிடித்துள்ளார்.

இந்தியாவின் 2வது மிகப்பெரிய பணக்காரரான அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி, 50.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர சொத்து மதிப்புடன் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 24 வது இடத்தில் உள்ளார்.

உலகின் வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவில் அதிகமாக 724 கோடீஸ்வரர்கள் உள்ளனர் (கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 614ஆக இருந்தது). சீனாவில் 698 கோடீஸ்வரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 456ஆக இருந்தது.

உலகில் அதிகமான கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியா 140 கோடீஸ்வரர்களையும், ஜெர்மனி 136 கோடீஸ்வரர்களையும், ரஷ்யா 117 கோடீஸ்வரர்களையும் கொண்டுள்ளது.

ஆசிய-பசிபிக் நாடுகளைச் சேர்ந்த 1,149 கோடீஸ்வர்களின் மொத்த சொத்து மதிப்பு 4.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்றும், அமெரிக்க கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 4.4 டிரில்லியன் என்றும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

feature-top
feature-top