The News Sponsor By
feature-top
feature-top

ஒன்ராறியோ முழுவதும் Covid-19 வைரஸ் தொற்றின் பரவல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு துறைகள் இயங்குவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாடசாலைகளும் கல்வியை மெய்நிகர் வகுப்பின் வாயிலாக மாணவர்களுக்கு கற்பித்து வருகிறது. தற்பொழுது ரொறன்ரோவில் Covid-19 வைரஸ் தொற்றுக்களின்  எண்ணிக்கை அதிகமாக பதிவாகிக் கொண்டே வருகிறது.

இதனைத் தொடர்ந்து ரொறன்ரோ பகுதியின் நடத்திவரும் பாடசாலைகள் கணிசமாக மூடப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது ரொறன்ரோவில் இயங்கி வரும் அனைத்து பாடசாலைகளையும் புதன் கிழமையிலிருந்து ஏப்ரல் 18-ஆம் தேதி வரை மூடுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் இந்த அறிவிப்பானது ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை ரொறன்ரோ பொது சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு சில பாடசாலைகள் மட்டும் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அனைத்து பாடசாலைகளும் இயங்குவதற்கு தடை விதிக்கப்படுவது தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காகவே என்று பொது சுகாதார அமைச்சகம் கருத்தினை  வெளியிட்டுள்ளது.

மெய்நிகர் வகுப்புகளாக மாணவர்களுக்கு பாடங்களை மீண்டும் கற்பிப்பதற்கு மற்றும் கற்றுக்கொள்வதற்கு அனைத்து ஆசிரியர் மற்றும் மாணவர்களின் மனநிலை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெய்நிகர் வகுப்புகள் தற்காலிகமாக மட்டுமே நடத்தப்படும் என்றும் ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு பிறகு நேரடி வகுப்புகள் ஆக பாடசாலைகளிலேயே நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

feature-top
feature-top