The News Sponsor By
feature-top
feature-top

கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் " பரிமாணம்" பத்திரிகை அறிமுக விழா நேற்று புதன்கிழமை (07) மாலை 3.30 மணிக்கு திருகோணமலை மாவட்ட சர்வோதய நிலைய மண்டபத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ . அச்சுதன் தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்வில் பத்திரிகையின் முதல் பிரதியை திருகோணமலை பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் பிரதம குரு வேதாகமமாமணி பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திரக்குருக்கள் மற்றும் சாஜஹான் மெளலவி ஆகிய இருவருக்கும் வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.

விழாவின் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சபை செயலாளர் கலாநிதி. எம். கோபாலரெத்தினம்,  கிழக்கு மாகாண சபை பொதுச் சேவை ஆணைக்குமுவின் செயலாளர் எம்.வை.சலீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பத்திரிகையின் அறிமுக உரையை,  சிறப்பு உரையை மூத்த எமுத்தாளர் திருமலை நவம்,  அரசியல் ஆய்வாளர் ஆ. யதீந்திரா ஆகியோர் வழங்கினர்.

பரிமாணம் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வி. ரி. சகாதேவராஜா,  முகாமைத்துவ ஆசிரியர் டி. கேதீஸ்,  சம்பூர் தமிழ்க் கலாமன்றத்தின் செயலாளர் பா. பிரியங்கன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

feature-top
feature-top
Generic placeholder image

தாயும், அவரது தோழியும் தங்களை நரபலி கொடுக்க முயற்சிப்பதாக கதறும் சிறுவர்

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம், ரஞ்சி