The News Sponsor By
feature-top
feature-top

ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னணியில் நௌபர் மௌலவி இருப்பதற்கான வாய்ப்பு இருந்தாலும், அவர் அந்தத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்,  ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைத்தாரிகள் பலரை புலனாய்வுத் துறையினரே வளர்த்திருப்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் கூறினார்.

இந்தத் தாக்குதல்களின் தயாரிப்பு, இயக்கம், மத்தியக் கிழக்கு நாடான இஸ்ரேலாக இருக்குமெனச் சந்தேகம் தெரிவித்த அவர், சஹ்ரானின் மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, அபுஹிந்த் என்கிற நபரும் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான இறுதி நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் சூத்திரதாரி யாரென இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. நௌபர் மௌலவியே தாக்குதலின் பிரதான சூத்திராதியென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருக்கிறார்.

இருப்பினும், நௌபர் மௌலவி பிரதான சூத்திரதாரியாக இருக்க முடியாது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளுக்கு அமைவாக நௌபர் மௌலவியை விட பெரிய சூத்திரதாரி ஒருவர் தாக்குதலுக்குப் பின்னால் இருக்கிறார். அவர் யாரென இதுவரையில் அரசாங்கம் கண்டுப்பிடிக்கவில்லை”  என்றும் குறிப்பிட்டுள்ளார்.

feature-top
feature-top