The News Sponsor By
feature-top
feature-top

மாணவர்கள் சிலருக்கு பயங்கரவாத சொற்பொழிவினை மேற்கொண்டதான குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சஹ்ரான் ஹாசிமின் வழிகாட்டுதலுக்கமைவாக, க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையை நிறைவு செய்த மாணவர்கள் சிலருக்கு பயங்கரவாத சொற்பொழிவு போதனை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் ஒலுவில் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒலுவில் பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் 30 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பயிற்சிகளை விரும்பாத மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தடுப்பு காவல் உத்தரவின் பேரில் அவர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹசீமின் ஒத்துழைப்புடன் குறித்த வகுப்புக்கள் நடாத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
 

feature-top
feature-top