The News Sponsor By
feature-top
feature-top

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த பொலிஸார் நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் குறித்த பொலிஸார் கடமை நிமிர்த்தம் வெளிமாவட்டங்களுக்குச் சென்று திரும்பியதால் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றனர்.

இந்நிலையிலேயே அவர்களுக்கு ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான பொலிஸாரை கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சியிலிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

feature-top
feature-top