The News Sponsor By
feature-top
feature-top

ஒன்ராறியோ மாகாணத்தின் 114 COVID-19 ஹாட் ஸ்பாட்களில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், மே 3 முதல்  தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டி பதிவு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

மே 3, காலை 8 மணிக்கு தொடங்கி, COVID-19 ஹாட் ஸ்பாட் சுற்றுப்புறத்தில் வசிக்கும் எவரும், மாகாண ஆன்லைன் முன்பதிவு முறை மூலம் அல்லது நேரடியாக தங்கள் சொந்த முன்பதிவு முறையைப் பயன்படுத்துமாறு பொது சுகாதார பிரிவுகள் கேட்டுக்கொண்டுள்ளன.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு, ஒன்ராறியோ தனது தடுப்பூசி விநியோகத்தில் 50 சதவீதத்தை COVID-19 ஹாட் ஸ்பாட்களுக்கு செலுத்த உள்ளது. இது COVID-19 பரவுவதை மெதுவாக்க உதவும்.

"கூடுதல் விநியோகத்துடன் எங்கள் அரசாங்கம் COVID-19 தடுப்பூசிகளுக்கான அணுகலை அதிகரித்து வருகிறது" என்று சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் "ஆபத்தில் உள்ளவர்கள் தடுப்பூசிகளைப் பெறுவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவது, இந்த சமூகங்களில் COVID-19 பரவுவதைத் தடுக்கவும், எங்கள் மருத்துவமனைகளின் திறனைப் பாதுகாக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் உதவும்" என்று கூறியுள்ளார்.

ஒன்ராறியோ மே 6 முதல் இன்னும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை விரிவுபடுத்த உள்ளது. 

மே 3 திங்கட்கிழமை காலை 8 மணிக்கு, ரொறன்ரோ ஹாட் ஸ்பாட் அஞ்சல் குறியீடுகளில் வசிக்கும் 18 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் www.toronto.ca/covid-19 என்ற இணையதளத்தில் நுழைந்து, அடர் நீல நிற "Book a Vaccine"  பொத்தானின் மூலம் பதிவு செய்யலாம். தடுப்பூசி முன்பதிவு செய்ய  1-833-943-3900 என்ற எண்ணிலும் அழைக்கலாம்.

மாகாணம் முழுவதும் 114 அஞ்சல் குறியீடுகளை ஹாட் ஸ்பாட்களாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அவற்றில் ஐம்பத்து மூன்று ரொறன்ரோவில் அமைந்துள்ளது.

அதன் விவரங்களை அறிந்து கொள்ள பின்வரும் இணைப்பை சொடுக்கலாம். https://www.toronto.ca/news/torontonians-age-18-and-older-from-hot-spot-postal-codes-eligible-for-vaccination-at-city-of-toronto-immunization-clinics-starting-tomorrow/

 

feature-top
feature-top