The News Sponsor By
feature-top
feature-top

பிராம்ப்டனின் புதிய மின்சார பேருந்துகள் மே 3 (இன்று) முதல் பயணத்தை தொடங்க உள்ளன.

பிராம்ப்டன் டிரான்சிட்டின், மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்படவிருக்கும் விழாவை கொண்டாட, மே 3 திங்கள் நகரம் ஒரு மெய்நிகர் வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது.

Routes 23 Sandalwood மற்றும் 26 Mount Pleasant தடத்தில் இந்த சேவை தொடங்கப்படுகிறது.

ஜனவரி மாதத்தில் நகரம் புதிய வாகனங்களை பிராம்ப்டன் டிரான்சிட்டில் வரவேற்கத் தொடங்கியது. இதுவரை மொத்தம் எட்டு மின்சார பேருந்துகள் பிராம்ப்டன் சாலைகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளன.

அரசின் கூற்றுப்படி, ஒரு மின்சார பேருந்தால் ஆண்டுக்கு சுமார் 235 டன் CO2 சேமிக்கப்படுகிறது. ஒவ்வொரு பஸ்ஸும் முழுமையாக சார்ஜ் செய்ய மூன்று முதல் ஏழு நிமிடங்கள் ஆகும்.

Mount Pleasant Village terminal, the Queen Street, Highway 50 Zum station, Sandalwood Transit Facility ஆகிய நான்கு பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பேருந்துகளை இயக்கும் கனடாவின் முதல் நகரமாக பிராம்ப்டன் இருக்கும் என்று மேயர் பேட்ரிக் பிரவுன் கூறினார்.

feature-top
feature-top