The News Sponsor By
feature-top
feature-top

கிளிநொச்சியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது எட்டு லட்சத்து பத்தாயிரம் ரூபா மதிப்புள்ள 1000 ரூபா போலி நாணயத்தாள் இவ்வாறு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர் போலி நாணயத்தாள்களை சந்தேகத்திற்கிடமான வகையில் பையில் எடுத்து செல்லப்படுகின்றமை தொடர்பில் பொலிஸ் விசேட பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து  பொலிஸ் விசேட பிரிவினரால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த சந்தேக நபரை பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பையில் எட்டு லட்சத்து பத்தாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் காணப்பட்டுள்ளது. அதனை மீட்ட பொலிசார் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை எனவும், சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

feature-top
feature-top