The News Sponsor By
feature-top
feature-top

வவுனியாவின் இருவேறு பகுதிகளில் பொலிஸ் என கூறி நகை கொள்ளை.

வவுனியாவின் இருவேறு பகுதிகளில் போலீசார் என தெரிவித்து 30 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது .

நேற்றைய தினம், வவுனியா நகர் மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் தங்களை பொலிசார் என கூறியுள்ளனர்.

பின்னர் வீட்டில் சோதனை செய்வது போல பாசாங்கு செய்து விட்டு இரு வீடுகளில் இருந்தும் 30 பவுண் தங்க ஆபரணங்களை களவாடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

feature-top
feature-top