The News Sponsor By
feature-top
feature-top

ஆந்திராவில் அரசு மருத்துவமனையில் ஒக்சிஜன் பற்றாக்குறை : 8 கொரோனா நோயாளிகள் பலி.

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குறைந்த அளவில் ஒக்சிஜன் வழங்கப்பட்டதால் கொரோனா நோயாளிகள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்துபுரம் அரசு மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 47 பேர் வெண்டிலேட்டர் மூலம்  சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒக்சிஜன் சப்ளை செய்யப்பட்டு வந்த வயரில் 4.5 மில்லிமீட்டர் அளவுக்கு செலுத்த வேண்டிய நிலையில் 2 மில்லி மீட்டர் மட்டுமே ஒக்சிஜன் செலுத்தப்பட்டதாகவும், இதனால் பல நோயாளிகள் போதிய ஒக்சிஜன் கிடைக்காமல் மூச்சு விட முடியாமல் திணறிய நிலையில்,8 நோயாளிகள் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

feature-top
feature-top