The News Sponsor By
feature-top
feature-top

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள்.  

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் மேலும் ஐந்து கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கூழாவடி பகுதியில் நேற்று  அன்டிஜன் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

கூழாவடி பகுதியில் 120பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஐந்து பேர் கொரோனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று  மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் இதில் இருவர் வெளியிடங்களை சேர்ந்தவர்கள் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் இதுவரையில் 1350 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

feature-top
feature-top