The News Sponsor By
feature-top
feature-top

இந்தியாவிற்கு மூவாயிரம் வெண்டிலேட்டர்கள் வழங்க கனடா நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.

ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் பார்ட் இதனை தெரிவித்தார். இவற்றின் மொத்த மதிப்பு 144 கோடி என தெரிகிறது. பிராம்டனில் உள்ள உள்ள ஓ டூ மெடிக்கல் டெக்னாலஜி நிறுவனம் இவற்றை தயாரித்துள்ளது.

இதே போல கனடா அரசு சார்பிலும் அவசர சிகிச்சைக்கான உபகரணங்கள் திரட்டி, இந்தியாவிற்கு வழங்க உள்ளது. கடந்த மார்ச் மாதம் கனடாவிற்கு இந்திய அரசு 5 லட்சம் கோவிஷீல்டு நோய் தடுப்பு மருந்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

feature-top
feature-top