The News Sponsor By
feature-top
feature-top

திமுகவினர், சென்னையில் அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை ஜெ.ஜெ.நகரில் இன்று காலை அம்மா உணவகத்திற்கு சென்ற திமுக குண்டர்கள் 15-க்கும் மேற்பட்டோர் வாசலில் இருந்த உணவகத்தின் போர்டு மற்றும் விலை பட்டியல் பதாகைகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

அம்மா உணவகத்தின் உள்ளே புகுந்த திமுக குண்டர்கள் சமைத்து வைத்து இருந்த உணவு பாத்திரங்களை கீழே தள்ளியும், காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வீசியெறிந்தும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். பணியில் இருந்த பெண்களை உருட்டுக்கட்டைகளை கொண்டும் அவர்கள் தாக்கி இருக்கிறனர்.

அம்மா உணவகத்தில் திமுக-வினர் நடத்தி இந்த அராஜகம் தெரியாமல் வழக்கம் போல உணவு வாங்க ஜெ.ஜெ.நகர் அம்மா உணவகம் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

feature-top
feature-top