The News Sponsor By
feature-top
feature-top

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 12 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் யாழ் மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.

தற்போதய கோவிட்-19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் பிரதி முதல்வர் து. ஈசன் உட்பட பல மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த முதல்வர் ..

உயிரிழந்த எமது உறவுகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது அவர்களது இழப்புக்கு நீதியை பெற்று கொடுப்பதாகும் என்று தெரிவித்தார்.

நீதி கிடைக்கும் வரை ஓயாது போராட நாம் உறுதி பூணுவோம் என்றும் தெரிவித்தார்.

feature-top
feature-top