The News Sponsor By
feature-top
feature-top

கொவிட்19 அசாதாரண சூழ் நிலை காரணமாக கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (18)ஐந்தாவது நாளாக தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் உள்ளது.

குறித்த பகுதியில் முப்படையினர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்தியவசிய தேவைகளுக்காக மாத்திரம் கிண்ணியா பிரதேச செயலகம் ஊடாக வெளிச் செல்வதற்கான அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மருந்தகங்கள் மாத்திரம் திறக்கப்பட்டுள்ள நிலையில் சனநெறிசலற்ற நிலை காணப்படுவதுடன் மக்கள் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வதனை காணமுடிகிறது.

கடந்த 14.05.2020 அன்று குறித்த கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

feature-top
feature-top