The News Sponsor By
feature-top
feature-top

"Debucari" என்ற இந்த புதிய சேவை ஜப்பானில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 கிலோவுக்கும் மேலான மனிதர்களை தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ தங்களிடமிருந்து வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ள அந்நிறுவனம், இதற்காக ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு 2000 ஜப்பானிய யென்கள் கட்டணமாக தர வேண்டும் எனவும் கூறுகிறது. 

"Debucari" என்ற இந்நிறுவனத்தை Mr. Bliss என்ற நபர் தொடங்கியுள்ளார். இவர் ஏற்கனவே பிளஸ் சைஸ் நபர்களுக்கான ஆடை நிறுவனமான Qzilla-வை 2017ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், எடை அதிகம் கொண்ட நண்பருக்கு ஆடை வாங்குவதற்காக செல்லும் போது அதனை உடுத்திப் பார்க்க ஒரு மாடல் தேவை என்றாலோ, டயட் பிளான் குறித்த விளம்பரங்களை எடுப்பதற்கான மாடல் தேவை என்றாலோ, அல்லது இன்னபிற காரணங்களுக்காகவோ உங்களுக்கு பருமனான நபர்கள் தேவை எனும் போது எங்களை அணுகி சேவையைப் பெறலாம்" என வித்தியாசமான கோணத்தில் பதில் தருகிறார்.


feature-top
feature-top