The News Sponsor By
feature-top
feature-top

மிசிசாகா பகுதியில் பெண் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். புதன்கிழமை அன்று இரவு 11 :40 மணி அளவில் சம்பவம் நிகழ்ந்ததாகதகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவமானது ஒன்பதாவது தெருவில் உள்ள வர்த்தக வளாகத்தின் வெளியே நிகழ்ந்து இருப்பதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்மணி அபாயகரமான துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வியாழக்கிழமை அன்று காலை காவல்துறை கான்ஸ்டபிள் அதிகாரி அகில் செய்தியாளர்களிடம் காவல்துறைக்கு வந்த அழைப்புகள் குறித்த தகவல்களை கூறினார். 

காவல்துறைக்கு தகவல் கிடைத்த பின்னர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அதிகாரிகள் வந்து பார்த்தபோது துப்பாக்கி சூட்டினால் பலத்த காயங்களுடன் பெண் கிடந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது மற்றும் பெயர் குறித்த தகவல்களை காவல்துறையினர் வெளியிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். 

சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்த தகவலையும் காவல் துறையினர் இன்னும் வெளியிடவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது. காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால் சரியான தகவல்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்பதனால் சம்பவம் குறித்து தகவல்களை இன்னும் வெளியிடவில்லை என்று அதில் கூறியுள்ளார். 

மேலும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் அமைந்துள்ள அனைத்து கேமரா வீடியோ பதிவுகளையும் கண்காணித்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த கொலைச் சம்பவம் குறித்த விசாரணை தற்போது தீவிரமாக பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியினர் பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் தகவல்

feature-top
feature-top