The News Sponsor By
feature-top
feature-top

ஒன்ராரியோ மாகாணத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்துகள் விநியோகித்தல் குறித்த தகவல்களை விரைவில் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகம் உள்ள இடங்களில் இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்து வழங்குவதற்கான திட்டம் மாகாண அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்துகள் குறித்த தகவல்களை சுகாதார அமைச்சர் கிரிஸ்டின் எல்லியட் உடன் வழக்குரைஞர் ஜெனரல் சில்வியா ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

 மாகாண அரசாங்கம் இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்துகளை விரைவாக விநியோகிப்பதற்கு முன்பதிவு செய்வதற்கான வரம்புகளை அதிகரித்து மாகாணம் முழுவதும் சில வாரங்களுக்கு உள்ளேயே மருந்துகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிவித்திருந்தது. 

70 வயது உடையவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அதைப்போல ஏற்கனவே முதல் கட்ட தடுப்பூசி மருந்து எடுத்து கொண்டவர்களில் ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு முன்னர் முதல்கட்ட தடுப்பு ஊசி மருந்தினைப் பெற்றுக் கொண்டவர்கள் அனைவரும் இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்து பெற்றுக்கொள்வதற்கான முன்பதிவு செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 

அஸ்திரா ஜனகா முதல் கட்ட தடுப்பூசி மருந்து பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்துகளை மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

செவ்வாய்க்கிழமை பெற்ற தகவலின் படி 1.2 மில்லியன் மக்கள் ஒன்டாரியோவில் இரண்டு கட்ட தடுப்புசி மருந்துகளையும் செலுத்திக்கொண்டு முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக பதிவாகியுள்ளது

feature-top
feature-top