The News Sponsor By
feature-top
feature-top

ரஷியாவின் மேற்கு பகுதியில் உள்ள ரியாசான் நகரில் மிகப் பெரிய வைத்தியசாலை ஒன்று உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில்  இந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் திடீரென தீப்பிடித்தது.

இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. இதையடுத்து வைத்தியசாலை ஊழியர்கள் நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்ற தொடங்கினர்.

தீயின் கோரப்பிடியில் சிக்கி நோயாளிகள் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மற்றொரு வைத்தியசாலை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.

feature-top
feature-top