The News Sponsor By
feature-top
feature-top

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு  உரங்களை உற்பத்தி செய்வதற்கான விரைவான திட்டத்தை தயாரிக்குமாறு அறிவுறுத்தினார்.

ஏற்கனவே  உரங்களை உற்பத்தி செய்து வரும் உள்ளூராட்சி மன்றங்களிடம் ஆளுநர் இந்த செயல்முறையை மேம்படுத்த தேவையான திட்டங்களை சமர்ப்பிக்குமாறும்  கேட்டுக் கொண்டார்.

விவசாயத்திற்கு முழு உரங்களைப் பயன்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து தெரிவிக்க Zoom இணையவழி  தொழில் நுட்பத்தின் மூலம் நடைபெற்ற சிற கூட்டத்தின் போதே  ஆளுநர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இதற்கிடையில், குப்பை சேகரிப்பு குறைவாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களில்  உரங்களை உற்பத்தி செய்ய மாற்று முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

கூடுதலாக, மாகாண விவசாய சேவைகள் பணிப்பாளர், மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு  விவசாய சமுதாயத்திற்கும் தங்களுக்குத் தேவையான  உரங்களை உற்பத்தி செய்வதற்கான சிறப்புத் திட்டங்களைத் தயாரிக்குமாறு பணிக்கப்பட்டார்கள்.

இவ் zoom தொழில் நுட்ப இணைய வழி கலந்துரையாடலில் கிழக்கு மாகாண  பிரதம செயலாளர் , விவசாய அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையர்கள், மேயர்கள் மற்றும் பிரதேச ,நகர சபைகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

feature-top
feature-top