The News Sponsor By
feature-top
feature-top

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 2 - 0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது.

கொழும்பு - ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து 104 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 14.1 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.  

feature-top
feature-top