The News Sponsor By
feature-top
feature-top

கர்நாடக மாநிலத்தில் ஜீப் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

சிந்தாமணி ஒருவழிச் சாலையில் சென்ற கொண்டு இருந்த ஜீப்பும், சிமெண்ட் பாரம் ஏற்றிக் கொண்டு எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.

விபத்தில் ஜீப்பில் 14 பேர் பயணித்த நிலையில்  6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.    

feature-top
feature-top