The News Sponsor By
feature-top
feature-top

சிக்கன் பேரண்டிங் ஒரு வினோதமான குழந்தை வளர்ப்பு முறையாகும். இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கோழியின் இரத்தம் கொண்ட ஊசியை செலுத்துகிறார்கள். 

இது, கருவுறாமை, புற்றுநோய் மற்றும் வழுக்கை உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கான ஒரே மருந்தாக இருக்கும் என அவர்கள் கருதுவதாக தி சிங்கப்பூர் போஸ்டின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்த கோழி இரத்த ஸ்டீராய்டுகள் குழந்தைகளிடம் (Children) உயர் செயல்திறனையும் அதிகரிக்கிறது. இதனால் குழந்தைகள், கல்வி விளையாட்டு என அனைத்திலும் மிக அதிக சுறுசுறுப்புடன் செயல்படுகிறார்கள். இது அவர்களது செயல்திறனை பன்மடங்கு அதிகரிப்பதாக நம்பப்படுகின்றது.

சீன இளைஞர்களிடையே மனச்சோர்வு கணிசமாக அதிகரித்துள்ளது என்று SupChina ஊடகத்தின் அறிக்கைகள் வெளிப்படுத்தின.

 2019-20 தேசிய மனநல மேம்பாட்டு அறிக்கை, சீன இளைஞர்களில் 25 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7.4 சதவீதம் பேர் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்ததாக, சிங்கப்பூர் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.


feature-top
feature-top