The News Sponsor By
feature-top
feature-top

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாலம் இல்லாததால் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி இறந்தவர் சடலத்தை தூக்கிச் சென்று கிராம மக்கள் இறுதி சடங்கு செய்து வருகின்றனர்.

 தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள வீரியங்கோட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடலை எரிப்பதற்கு மயானத்திற்கு எடுத்து சென்றனர்.

வீரியங்கோட்டை ஆதிதிராவிடர் தெருவில் இருந்து முடச்சிக்காடு செல்லும் சாலையில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கான மயானத்திற்கு செல்லும் பாதையின் குறுக்கே கல்லணை கால்வாயின் கிளை பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை கடந்துதான் மயானத்துக்கு செல்ல முடியும். தற்போது வாய்க்காலில் தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது.

வாய்க்காலில் பாலம் இல்லாததால் சடலத்துடன் உறவினர்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி அதனை கடந்து மறுபுறம் சென்று மகாலிங்கம் உடலுக்கு இறுதி நிகழ்ச்சிகள் செய்தனர்.

 வாய்க்கால்களில் தண்ணீர் செல்லும் போது தொடர்ந்து இதுபோல் இன்னல்கள் ஏற்படுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என்றும் மயானத்திற்கு செல்லக்கூடிய பாதையை சீரமைத்து தர வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

feature-top
feature-top