The News Sponsor By
feature-top
feature-top

இந்தமுறை ஜக்மீத் சிங் கனடா அரசியல் முக்கிய ரோல் வகிக்க வாய்ப்பிருக்கிறது. நடக்கவிருக்கிற தேர்தலில் ட்ரூடோவின் லிபரல் கட்சி பெரும்பான்மை பெறாத பட்சத்தில் ஜக்மீத் சிங் கிங் மேக்கராக உருவாக வாய்ப்பிருக்கிறது. 

கிரேட்டர் ரொறன்ரோ பெருநகரப் பகுதி இந்திய கனேடிய மக்கள் அதிகம் வசிக்கும் இடமாகும். இந்தப் பகுதியில் இருந்து மணீந்தர் சித்து (பிராம்ப்டன் கிழக்கு), ரூபி சஹோட்டா (பிராம்ப்டன் நார்த்), கமல் கெரா (பிராம்ப்டன் மேற்கு) மற்றும் சோனியா சித்து (பிராம்ப்டன் சவுத்) போன்றோர் லிபரல் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 

இப்போது இவர்கள் அனைவரும் மீண்டும் தேர்தல் களம் காண்கிறார்கள்.இதேபோல் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்களாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்வீன் ரத்தன், ஜகதீப் சிங், நேவல் பஜாஜ், மேதா ஜோஷி மற்றும் ரமன்தீப் சிங் பிரார் ஆகியோர் மிசிசாகா-ஸ்ட்ரீட்ஸ்வில்லி, பிராம்ப்டன் சென்டர், பிராம்ப்டன் கிழக்கு, பிராம்ப்டன் நார்த் மற்றும் பிராம்ப்டன் சவுத் ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர். 

இவ்வளவு பேர் போட்டியிட காரணம், கனடாவில் ஒரு சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளி மக்கள். அவர்களின் வாக்கு வங்கியை குறிவைத்து, இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களேயே வேட்பாளர்களாக களமிறக்கின்றன முக்கிய கட்சிகள் அனைத்தும்.

feature-top
feature-top