The News Sponsor By
feature-top
feature-top

கனடா மற்றும் மெக்ஸிகோவுடனான தமது தரைவழி எல்லைகளை, கார்த்திகை மாத ஆரம்பத்தில் மீளத் திறக்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அத்துடன், எல்லைகள் திறக்கப்படும் திகதியை, நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் என வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  

இதற்கமைய, பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உள்ளான, அத்தியாவசியமற்ற பயணிகளுக்காக இவ்வாறு எல்லைகள் திறக்கப்பட உள்ளன.

தற்போது, ஜோன்சன் அண்ட் ஜோன்சன், ஃபைஸர்- பயோஎன்டெக் மற்றும் மொடர்னா ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.  

feature-top
feature-top