The News Sponsor By
feature-top
feature-top

குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டுப் பொருட்கள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் மேக்கப் பொருட்கள் தொடங்கி பிளாஸ்டிக் கண்டெய்னர்கள் வரையிலான பொருட்களில் இருக்கக்கூடிய ஒரு ரசாயனம், அமெரிக்காவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் மரணத்துக்கு காரணமாக இருப்பதாக அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

பிளாஸ்டிக் கொள்கலன்கள் முதல் ஒப்பனை வரை எல்லாவற்றிலும் பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் குழுவான தாலேட்ஸின் (phthalates) தினசரி பயன்பாடு, வயதில் மூத்த அமெரிக்கர்களில் ஆண்டுதோறும் சுமார் 100,000 இறப்புகளுக்கு காரனமாக இருப்பதாக நியுயார்க் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பல ஆண்டுகளாக நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள், ஆடைகள், ஷாம்பூ போன்றவற்றில் நிரம்பியிருக்கும் தாலேட்ஸ் என்ற அந்த ரசாயனம் மனிதர்களளின் நாளமில்லா சுரப்பிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாகும்.

இது போன்ற பொருட்களில் இருக்கக்கூடிய அந்த ரசாயனம் நம் உடலுக்குள் செல்வதால் நமக்கு இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் போன்றவற்றிற்கு காரணமாக இருப்பதாக ஜூர்னல் என்விரான்மெண்ட் பொலூஷன் என்ற இதழில் வெளியாகி இருக்கும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

feature-top
feature-top