The News Sponsor By
feature-top
feature-top

40,000 ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக கனேடிய அரசாங்கம் கூறியுள்ளதுடன் அகதிகளை மீளக்குடியமர்த்துவதற்கான ஆதரவை அதிகரிக்குமாறு ஏனைய நாடுகளை கனடா வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிக்கையில்,

"கனடா 40,000 ஆப்கான் அகதிகளை வரவேற்கிறது, அகதிகளை பாதுகாப்பாக மீளக்குடியமர்த்துவதற்கு தங்கள் ஆதரவை அதிகரிக்குமாறு மற்றவர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்“ என பதிவிட்டுள்ளார்.

"உலக சமூகம் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியை அணுகுவதை உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம் , ” என  பிரதமர் தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

feature-top
feature-top