The News Sponsor By
feature-top
feature-top

பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் பியாரிட்ஸ்.

இந்த நகரம் பிரான்சுக்கு வரும் அகதிகளுக்கான பிரதான போக்குவரத்து பாதையாக உள்ளது.

அந்த வகையில்  பியாரிட்ஸ் நகருக்கு வந்த அகதிகள் சிலர் அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தண்டவாளத்தில் ரயில் வருவதை அவதானிக்காது  உறங்கிய அகதிகள் மீது ரயில் ஏறி சென்றுள்ளது.

இந்த கோர சம்பவத்தில் அகதிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் ஒரு அகதிக்கு கால் உடைந்துள்ளது.

உடனடியாக அவரை  மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

feature-top
feature-top