The News Sponsor By
feature-top
feature-top

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழைக்கு வீடு இடிந்த விபத்துகளில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

வீடுகள் வயல்கள், வாழைத் தோப்புகள் என கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மலப்புரம் கண்ணூர் பகுதிகளில் பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

மூணாறில் பலத்த மழை பெய்ததன் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கேரளாவில் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னும் சில நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.    

feature-top
feature-top