The News Sponsor By
feature-top
feature-top

வவுனியா குடியிருப்பு குள வீதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் காலாவதியான மருந்துகளை நோயாளி ஒருவருக்கு வழங்கியமையால் குழப்பமான நிலமை ஏற்பட்டிருந்தது.

வவுனியாவை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு சுகவீனம் ஏற்பட்ட நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு சென்று நேற்றுமுன்  தினம் சிகிச்சையினை முன்னெடுத்திருந்ததுடன், மருந்தினையும் பெற்று சென்றிருந்தார்.

குறித்த மருந்துகளை சோதித்து பார்த்தபோது ஒருமாதத்திற்கு முன்பாகவே அவை காலாவதியாகியுள்ளமையினை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் காலை குறித்த வைத்தியசாலைக்கு சென்ற விடயத்தினை தெரியப்படுத்தியதுடன், தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்தார்.

இதனையடுத்து அங்கிருந்த பணியாளர் காலாவதியான மருந்தை மூன்று மாதத்திற்கு பயன்படுத்தலாம் என நோயாளிக்கு தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

பாவனையாளர் அதிகாரசபையின் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், காலாவதியாகிய சில மருந்துகளையும் மீட்டிருந்ததுடன் வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.

feature-top
feature-top