The News Sponsor By
feature-top
feature-top

இலங்கையில் நேற்று முன் தினம் 12 ஆம் திகதி கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 31  கொவிட் மரணங்கள் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 20 ஆண்களும் 11 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,408 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய இது வரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 528 248 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 490 800 பேர் குணமடைந்துள்ளனர். 23 602  பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

feature-top
feature-top