The News Sponsor By
feature-top
feature-top

ஒன்ராறியோவில் ஆளில்லா விமானத்தின் மூலம் வழங்கப்பட்ட நுரையீரலால் நோயாளி ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் வரலாற்றில் முதல் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

63 வயதான அலைன் ஹோடக் ஆளில்லா விமானம் மூலம் நுரையீரல் இடமாற்றம் செய்த உலகின் முதல் நோயாளி என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

ஆளில்லா விமானத்தின் மூலம் ரொறொன்ரோ நகரின் குறுக்கே 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு ஜோடி நுரையீரல் கொண்டு செல்லப்பட்டது. இதுவே உலகின் முதல் நுரையீரல் டெலிவரியாகும்.

இந்த முயற்சி யுனிதர் பயோ எலக்ட்ரானிக் (Unither Bioelectronique) மூலம் முடிக்கப்பட்டது. நுரையீரல் ரொறொன்ரோ மேற்கு மருத்துவமனையிலிருந்து ரொறொன்ரோ பொது மருத்துவமனைக்கு, கொண்டு செல்லப்பட்டது.

feature-top
feature-top