The News Sponsor By
feature-top
feature-top

ஆல்பர்ட்டாவில் உள்ள பண்ணை ஒன்றில் கால்நடைகளுக்கு BSE என்ற நோய் பரவல் கண்டறியப்பட்டது. இதன் பின்னர், கனேடிய மாட்டிறைச்சி இறக்குமதிக்கு தடை விதித்து சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் நடவடிக்கை முன்னெடுத்துள்ளன.

ஆண்டுக்கு சுமார் $170 மில்லியன் மதிப்புடைய சீன சந்தையானது கனேடிய மாட்டிறைச்சித் தொழிலின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி சந்தையாகும். சீனா முன்னெடுத்துள்ள அதே நடவடிக்கையை தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளும் முன்னெடுத்துள்ளன.

இந்த நோய் பரவலானது கடந்த 6 ஆண்டுகளில் கனடாவில் இது முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 6 முறை குறித்த நோய் பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.

கால்நடைகளில் BSE என்ற நோய் தொற்றானது மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது மட்டுமின்றி, இது பரவும் வியாதியல்ல

feature-top
feature-top