The News Sponsor By
feature-top
feature-top

 அமெரிக்காவிலிருந்து கனடா வரும் தடுப்பூசி போடப்படாத, அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி போட்ட கனேடிய டிரக் ஓட்டுநர்களுக்கு, கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று CBSA தெரிவித்துள்ளது.

இருப்பினும், அமெரிக்கா டிரக் ஓட்டுநர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், இல்லையெனில் ஜனவரி 15 முதல் எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று CBSA செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து டிரக் ஓட்டுநர்களும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும் என்ற முடிவை மாற்றியமைப்பதாக CBSA புதன்கிழமை தெரிவித்ததை தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியானது.


feature-top
feature-top