The News Sponsor By
feature-top
feature-top

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் இருசக்கர உழவு இயந்திரத்தில் உழுது கொண்டிருந்த குடும்பஸ்தர் உழவு இயந்திரம் புரண்டதில் சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று மதியம் தோட்ட நிலத்தை உழும் போது  இந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் புத்தூர் - கலைமதி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னதம்பி தெய்வேந்திரன் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதே வேளை மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

feature-top
feature-top