The News Sponsor By
feature-top
feature-top

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த கால போரின் போது நிலத்தில் புதைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய ஆவணங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பாதுகாப்பு தரப்பினர் குறித்த பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் சீருடை அடங்கலாக முக்கிய பொருட்கள் இனம் காணப்பட்டு அவை நிலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் முல்லைத்தீவு போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய முக்கிய ஆவணங்களே இவ்வாறு நந்திக்கடல் களப்பு பகுதியில் நிலத்தில் புதையுண்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

feature-top
feature-top